திருப்பதியில் அமலானது புதிய சட்டம்! அனுமதி இல்லாமல் இனிமேல் எதையும் செய்ய முடியாது! 

Photo of author

By Rupa

 

திருப்பதி லட்டு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் திருப்பதி முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு காலங்காலமாக பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் புனிதம் கெட்டு விட்டது. இவை அனைத்தும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று கூறினார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் லட்டு விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதையடுத்து லட்டுவில் மாடு, பன்றி ஆகிய விலங்குகளின் கொழுப்புகள் கலந்ததால் கோயிலில் தீட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தீட்டை போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த திங்கட்கிழமை கோயிலில் சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது. அது மட்டுமில்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதைப் போல ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்கள் திருப்பதியில் ஏற்பட்டுள்ள கலங்கத்தை நீக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை(22.09.2024) சிறப்பு பரிகார பூஜையை தொடங்கினார். இந்த பூஜை வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தற்பொழுது திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க இனிமேல் கர்நாட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் உற்பத்தி செய்யும் நந்தினி நெய்யை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை கலந்துள்ளனர் என்று கூறி கலங்கத்தை ஏற்படுத்திவிட்டார். அவர் செய்த பாவத்தை பறக்கும் விதமாக சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பொது மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி லட்டு பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும் வேலையில் அரசியல் தலைவர்கள் பலரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி மாநிலம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு அவர்கள் “மாநிலம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 அமல்படுத்தப்படுகின்றது. அக்டோபர் 24ம் தேதி வரை இந்த சட்டம் மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். எனவே காவல் துறையிடம் அனுமதி பெறாமல் பேரணி பொதுக்கூட்டம் என்று எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. தடையை மீறி போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.