இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

Photo of author

By Anand

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

Anand

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விளைவாக ஓரளவு கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் தமிழக மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு தளர்வுகள் அறிவிக்கபட்டிருந்தது.கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட 7 வது ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்து என்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில் இனி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் வரும் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தளர்வுகளின் படி இ பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது.அதே போல பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உரிய வழிமுறைகளுடன் செயல்படலாம் என்றும்,ஹோட்டல்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை.

அடுத்ததாக பலரும் எதிர்பார்த்த வகையில் மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பல்வேறு கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.