வீண் அலைச்சலை தவிர்க்க புதிய நடவடிக்கை!! கிராமங்களில் விரைவு தபால் சேவை அறிமுகம்!!
கடலூர் மாவட்டத்தில் 383 கிராமபுற கிளை தபால் நிலையங்கள் செயல்படுகிறது. இவற்றை விரைவு தபால் சேவைக்கு நடைமுறைப்படுத்த இந்திய அஞ்சல் துறை புதிய நடைமுறையை கொண்டு வந்ததுள்ளது .இந்திய அஞ்சல் துறை ஆனது விரைவு தபால் சேவை, ரிஜிஸ்டர் தபால், சேமிப்பு கணக்கு, துவக்கம் செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு திட்டம், தொடர் சேமிப்பு, கால வைத்து நிதி, ஆயுள் காப்பீட்டு திட்டம், ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை என பல்வேறு சேவைகளை செயல்படுத்தி வருகின்றது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் விருதாச்சலம் என இரண்டு அஞ்சலக பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் மூன்று தலைமை தபால் நிலையங்கள், 85 துணை தபால் நிலையங்கள், 383 கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் மொத்தம் 471 தபால் நிலையங்கள் உள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்வது நடைமுறையில் இருக்கிறது.மேலும் நாடு முழுவதும் கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவை நடைமுறை இல்லாமல் இருக்கிறது.
கிராமப்புற மக்கள் அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும் மற்றும் துணை தபால் நிலையங்களுக்கும் சென்று தான் விரைவு தபாலை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கிராமப்புற மக்கள் அனைவரும் அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.
சில தபால் நிலையங்களில் காலதாமதம் அதிகம் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் அனைவரும் பயன் பெற நாடு முழுவதும் கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவை பதிவு செய்யும் நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் இந்நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்தே கிராமப்புற தபால் நிலையங்களில் நேரடியாகச் சென்று விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யலாம்.
மிக எளிய முறையில் தபால் காரர்களை மொபைலில் தொடர்பு கொண்டு வீட்டிற்கே வரவழைத்து பதிவு செய்து கொள்ளலாம். இதனால் கிராமப்புற மக்கள் அனைவரும் அஞ்சல் உயர் அதிகாரிகளுக்கு நன்றினை தெரிவித்து வருகின்றனர்.