சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சூப்பர் நடவடிக்கை! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!

0
171

டெல்லியில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, போன்றவற்றை குறைக்கும் விதத்தில் வாகன கட்டுப்பாடு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்ற இந்த திட்டத்தில் அரசு பணியாளர்களும் அவற்றைப் பிடித்து வருகிறார்கள். போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகையை வெளியேற்றும் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த நகரில் 54 லட்சம் மோட்டார் பைக்குகள் இயக்கப்படுகின்றன, குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில், தனிநபர்கள் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து நீண்ட போக்குவரத்து நெருக்கடி உண்டானது.

தற்சமயம் சென்னையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது, சென்னையில் நாள்தோறும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள், உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு திட்டத்தை வகுத்து இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக 335 கோடி ரூபாய் செலவில் மூன்று பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்திருக்கிறது. இதன்படி வியாசர்பாடி, கணேசபுரம், ஓட்டேரி, தியாகராய நகர் உஸ்மான் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 142 கோடி செலவில் 650 மீட்டர் நீளம் 15.20 மீட்டர் அகலத்திற்கு நான்கு வழி மேம்பாலம் கட்டப்படஇருக்கிறது.

அதேபோல ஓட்டேரியில் 62 கோடி ரூபாய் செலவில் 108 மீட்டர் நீளம் 8.4 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழி சாலை மேம்பாலம், டி நகர் உஸ்மான் சாலையில் 1200 மீட்டர் நீளம் 8.4 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழி சாலை மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் எந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்பது மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான் தெரியவரும் என்று தெரிவிக்கிறார்கள்.

Previous article10 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள்! முதல்வரின் அடுத்த இலக்கு!
Next articleபொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!