பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

0
188

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதிக்க தொடங்கிய சூழ்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வந்தத காரணத்தால், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்சமயம் வீரிய மிக்க நோய்த்தொற்று வகைகளில் ஒன்றான ஒமைக்ரான் பரவத் தொடங்கி இருக்கின்றது. ஆகவே இதனையடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் 15ஆம் தேதி அதாவது இன்று வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகை காலங்களில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், தற்சமயம் அண்டை மாநிலங்களில் பரவி வரும் புதிய வகை நோய் தொற்று உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தடுப்பூசி செலுத்தும் பணியினை விரிவுபடுத்தவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் நவம்பர் மாதம் 30 உள்ளிட்ட தேதிகளில் வெளியிட்ட அறிவிப்பின்படி நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதத்திலும், பரவிவரும் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவலை கருத்தில் வைத்தும் பொது மக்களின் நலன் கருதியும் நடைமுறையில் இருக்கின்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே சமயத்தில், ஒரே பகுதியில், கூட்டம் கூடுவதால் நோய் தொற்று நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது சமுதாயம் மற்றும் கலாச்சார அரசியல் கூட்டங்கள் பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்சமயம் நடைமுறையில் இருக்கின்ற தடை தொடரும் என்றும், நோய்தொற்று பரவலை கட்டுப் படுத்தும் விதத்தில் வருகின்ற 31ம் தேதி வரையில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி உள்ளிட்ட நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், கூறப்பட்டிருக்கிறது ஆகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும், அதோடு பின்வரும் செயல்பாடுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லா நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எல்லாவற்றிற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததன் காரணமாக, மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்து இருப்பதையும், மாணவர்களுடைய எதிர்காலத்தையும், கருத்தில் வைத்து ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறிதல், நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல், கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கும் பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணறிவு வரையில் வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த்தொற்று பரவலை வீடு, வீடாக சென்று கண்காணிப்பதற்காக தனித்தனியே குழுக்களை அமைத்து கண்காணிக்கப்படும், நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்கள் நடைபெற்றால் அதில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தற்சமயம் அண்டை மாநிலங்களில் புதிய வகை நோய்த்தொற்று பரவல் அதிகமாகி வருவதால் பொது இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதனால் நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எல்லோரும் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவது உடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் நலன் கருதி அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அனைத்து தொழில் நிறுவனங்களும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Previous articleசென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சூப்பர் நடவடிக்கை! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!
Next articleமீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சட்டசபை! 5ஆம் தேதி கூடுகிறது அடுத்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here