வங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு!

0
179

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் பல சலுகைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டது. 

பொருளாதார ரீதியாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் இந்த சலுகைகள் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சலுகைகளில் ஒன்றாக இஎம்ஐ தவணை முறையை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கட்ட தேவையில்லை என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. 

தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களின் கூட்டு வட்டியை மத்திய அரசு தவிர்க்க  உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தவிர்ப்பதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 

தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கூட்டு வட்டி தொகையை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் வங்கிகளின் கணக்கில் வரவு வைக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

Previous articleதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்!
Next articleதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..?