இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு

Photo of author

By Anand

இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு

தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது மாஸ்க் அணியாத ஊழியர்களை உடனடியாக  வெளியேற்ற வேண்டும். மேலும் பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது.

கொரோனா தொற்று சார்ந்த அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும்.

ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவேண்டும்.

பணியிடங்களில் ஒவ்வொரு நபருக்குமிடையே 2 மீட்டர் இடைவெளி உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.

மேலே கூறியது போல பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.