அரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன்! ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி!

Photo of author

By Sakthi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த சமயத்தில் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்ததால் அவர் பாஜகவில் வகித்து வந்த அறிவு ஜீவிகள் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ரஜினிகாந்த கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்த பிறகு அமைதியாக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்சமயம் அவரே ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற காரணத்தால், தன்னுடைய ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதன் காரணமாக ,அவருடைய ரசிகர்கள் எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் ஒரு சிலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்றைய தினம் கட்சி தொடங்க இருப்பதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அர்ஜுன மூர்த்தி தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருக்கிறேன் என்னுடைய கட்சியின் கோட்பாடுகள் கொள்கை என்று எல்லாமே பாஜகவிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் புகைப்படத்தையோ, அல்லது அவர் தெரிவித்த வாசகங்களை எந்த இடத்திலும், என்னுடைய கட்சியில் உபயோகப் படுத்த மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் என்னுடைய கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பணி செய்யலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பாக நேற்றைய தினம் அவருடைய வலப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.