தமிழகம் முழுவதிலும் அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!

0
120

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைகள், நாளேடுகள்மற்றும் தொலைக்காட்சிகள் என்று தங்களுடைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் எப்பொழுதும் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் பிரபலமான லயோலா கல்லூரி இந்த முறை தன்னுடைய கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை. அதோடு அந்த கல்லூரி பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு அறிக்கையை வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது அந்த கல்லூரியின் நிர்வாகம்.

அனேக நேரங்களில் எதிர்க் கட்சியான திமுகவிற்கு ஆதரவாகவே அந்த கல்லூரியின் கருத்துக்கணிப்பு இருந்ததாக சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த முறை திடீரென்று அந்தக் கல்லூரி தன்னுடைய கருத்துக் கணிப்பு நிறுத்திக்கொண்டது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.ஒருவேளை இந்த முறை தமிழகம் முழுவதிலும் அதிமுகவிற்கு இருக்கும் அளவுகடந்த வரவேற்பு காரணமாக, அந்தக் கட்சி தான் மீண்டும் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக தான் இந்த கல்லூரி தன்னுடைய கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மக்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நடந்தது. இந்த கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று 36 சதவீத மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக வருவார் என்று 34 சதவீத மக்கள் தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற சட்டசபை தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாவற்றையும் அதிமுக நிறைவேற்றி இருப்பதாக 51 சதவீத மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள் அதிமுக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததாக 43 சதவீத மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதே போல மின்சாரம், பொங்கல் பரிசு, அம்மா மெனி கிளினிக், ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது மற்றும் மிக்சி கிரைண்டர் மின்விசிறி மாணவர்களுக்கு சைக்கிள் மடிக்கணினி போன்றவை வழங்கும் திட்டங்கள் போன்ற எல்லாத் திட்டங்களையும் அதிமுக அரசு சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நூத்தி 12 இடங்கள் முதல் 120 இடங்கள் வரையில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் எனவும் திமுக கூட்டணி 80 முதல் 90 தொகுதிகள் வரை வெற்றி அடைந்து மீண்டும் எதிர்க்கட்சியாக அமரும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு சுமார் 24 சட்டசபைத் தொகுதிகள் இதுவரையில் எந்த ஒரு முடிவும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கிறது. ஜனநாயகத்தின் குரல் மற்றும் மக்கள் மையம் என்ற இரு அமைப்புகள் தனித்தனியே நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமரவும் என்று தெரிவித்து இருக்கிறது.

Previous articleரூ.10,000 அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்!
Next articleகொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!