கூலி படத்தின் புதிய போஸ்டர்!! லோகேஷ்கனகராஜ் வெளியிடு!!

Photo of author

By Vinoth

தமிழ் சினிமாத்துறையில் மிக அதிகமாக வெற்றி படங்களை தற்போது கொடுத்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ் அவர்கள். அதில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு இயக்கிய கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு  மிக பெரிய வசூல்  சாதனைன் படைத்தது. அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான “லியோ” படத்தை இயக்கயுள்ளர். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வசூல்  சாதனைன் படைத்தது.

இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பக்கப்படுகிறது. அதனின் புதிய போஸ்டர்கள் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் லோகேஷ்கனகராஜ் ஓரு நேர்காணல் பேசினார் அதில் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறினார். அதில் அவர் கூறியது ‘ரஜினி சார்’ இயக்குனர்களின் நடிகர். அவருடைய படத்தில் சக நடிகர் எப்படி நடிக்கிறார், பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்து கொண்டே இருப்பார். கமல் சார் முற்றிலும் மாறுபட்ட ஒருவர். தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று அவரே கூறுவார். எனவே ஒரு காட்சி குறித்து ஒரு நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் பேசுவதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இருவரும் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்’ என்றார்.