புதிதான மின் இணைப்பு!! மின்சாரத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!!

Photo of author

By CineDesk

புதிதான மின் இணைப்பு!! மின்சாரத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!!

மின்சார பயன்பாடு என்பது இன்று மிக மிக அத்தியாவசியமானது. மின்சாரம் இல்லாமல் சிறிது நேரம் கூட நம்மால் இருக்க முடிவதில்லை. அனைத்து வீடுகளிலும் மின்சார பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. இப்படி மின்சார தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிய மின் இணைப்பு பெறுவது என்பது கடினமாகவே உள்ளது.

இதற்கான விதிமுறைகளை நாம் சரியாக பின்பற்றினாலும், புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்களும், கால தாமதங்களும் ஏற்படுகின்றன. அதே போல் மின் கட்டணங்களிலும் குளறுபடிகள் ஏற்படுகின்றன. அதாவது நாம் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தாலும் அதற்கு பலமடங்கு தொகை மின் கட்டணமாக வந்திருக்கும்.

இதற்காக நாம் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு அதை சரி செய்து நமக்கு உரிய கட்டணத்தை செலுத்தி இருப்போம். இது போன்ற சிக்கல்களை தீர்க்க தமிழ்நாடு மின்சாரத்துறை 3 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

புதிய மின் இணைப்புக்காக விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய இணைப்பை கொடுக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் இதற்காக ரூ. 100 முதல் ரூ. 1000 வரை மின்சார வாரியம் இழப்பீடு தர வேண்டும்.

நீங்கள் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தி இருந்து, மின் கட்டணம் அதிக அளவில் இருந்தால்,  அது குறித்து மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்தால் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு மின்சாரத்துறை பெறுப்பேற்று,  அதற்கு இழப்பீடு தரக்கூடிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

சில இடங்களில், புதிதாக கம்பம் நடுதல், மற்றும் ட்ரான்ஸ் பார்மர்கள் அமைக்கும் பணிகளால் புதிய மின் இணைப்பு பெறுவதில் காலதாமதம் ஏற்படும். இது போன்ற இடங்களில் 90 நாட்களில் இந்த பணிகளை செய்து முடித்து இருக்க வேண்டும்.