சர்ச்சையின் அரசி கிளப்பிய புதிய பிரச்சனை!! நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்!! பிரபல நடிகர் பேட்டி!!

Photo of author

By CineDesk

சர்ச்சையின் அரசி கிளப்பிய புதிய பிரச்சனை!! நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்!! பிரபல நடிகர் பேட்டி!!

வனிதா விஜயகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகன் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்பு ஒரு சில தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர் சன் தொலைகாட்சி, பாலிமர் தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து இவர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சி மூலமாக இவர் மக்களின் எதிர்ப்புகளை கண்டு வந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் இவர் எங்கு சென்றாலும் சர்ச்சையை கிளப்புகிறார் என்று மக்கள் மனதில் பதிந்தது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளர் ஆனார். அதன் பிறகு கலக்கப் போவது யாரு பருவம் 9 இல் நடுவராக பங்கேற்றார்.

 

மேலும் இவர் எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் சர்ச்சையை கிளப்புவதில் கைதேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவராக இருக்கிறார்கள். மேலும் ஈரோடு மகேஷ் மற்றும் தீனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்துகொண்ட சிலர் தங்களது நடன கலையை வெளிப்படுத்தி வந்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் வனிதாவும் ஒரு போட்டியாளராக பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக சிறப்பாக ஒளிபரப்பாகி வந்தது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த நிலையில் கடந்த வாரம் அம்மன் வேடமணிந்து ஆடிய நடனத்திற்கு நடுவர்கள் தீர்ப்பு கூறும் பொழுது மற்றவர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று சர்ச்சையைக் கிளப்பி மேடையை விட்டு வெளியே சென்றுவிட்டார். மேலும் ஆஃப் கேமராவில் நடுவர்களை அசிங்க படுத்தியதாக செட்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் டிவியில் ஒளிபரப்பவில்லை இது குறித்து நிகழ்ச்சியின் நடுவரான நடிகர் நகுல் கூறுகையில் அம்மன் வேடமணிந்து இருப்பது கூட தெரியாமல் வனிதா விஜயகுமார் பல கடுமையான சொற்களில் பேசியுள்ளார். மேலும் நடுவர்களாக என்னையும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களையும் அசிங்கப்படுத்தி உள்ளதாகவும் செட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். இதற்காக என்னிடம் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் ரம்யாகிருஷ்ணன் அவர்களிடம் நிச்சயம் வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் மீது மேலும் கடுப்பில் உள்ளனர் ரசிகர்கள்.