விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!

Photo of author

By Sakthi

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்தார்.

அதோடு மட்டுமல்ல அவர் தமிழக அரசு முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் உறுதுணையாக இருந்திருக்கிறார். பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பல விஷயங்களில் தமிழக அரசுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். அதேபோல பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் ஆர்வமுடன் இருந்தார்.

அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தபடி தமிழகம் முழுவதிலும் சுமார் ஒரு கோடி மரங்களை நடுவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இதுவரையில் சுமார் 30 லட்சம் மரங்களை அவர் நட்டு இருக்கிறார்.இந்த நிலையில், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுதினமே அவருக்கு நெஞ்சுவலி வந்ததன் காரணமாக, வடபழனியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.இதனிடையே விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறந்துவிட்டாதாக மாநிலம் முழுவம் பேச்சுக்கள் அடிபட்டனர். இதற்கு காரணம் தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி வந்தது தான்.

இந்த நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பாக உரையாற்றிய நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக குற்றம்சாட்டியிருந்தார். அதோடு யாரும் முக கவசம் அணிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த சூழ்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மக்கள் நலத்திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் சோமு ராஜசேகரன் என்பவர் இந்த புகாரை தெரிவித்து இருக்கிறார்.

நோய் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும், ஆனாலும் இந்த சமயத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக கவசம் அணிய வேண்டாம் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக்கின் உடல்நிலை பாதிப்படைந்த அவர் ஒரு பொய்யான கருத்தை மாநிலம் முழுவதும் பரப்பி வருவதாகவும், இதன் காரணமாக மக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆகவே மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியிருக்கிறார்.