அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் காலத்துக்கு ஏற்ற மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் மாதம் 18ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிய பாடத்திட்டத்திற்கு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கல்வி குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்க படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு தனித்திறன் ஆகியவற்றை ஊக்கிவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தொழில் கேட்ப மாணவர்களை தயார் படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல் சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வருதல் தொழில் முனைவோர்களை உருவாக்குதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நடப்பாண்டில் புதிய பாடத்திட்டம் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.