ஆர்.ஓ.ஆர் ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!
நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் தன்மை ,நிலம் ,மீதான கடன், வில்லங்கம் ,வாடகை அல்லது வருவாய் ,நிலத்தின் வகைப்பாடு போன்ற அனைத்து தகவல்களும் அடங்கியது ஆர்.ஓ.ஆர் எனப்படுகின்றது.
நில ஆவணங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருபது மொழி தான்.அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றனர்.அந்த மொழிகளின் அடிப்படையில் ஆர்.ஓ.ஆர் ஆவணத்தை மொழிபெயர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக புதுச்சேரி ,தமிழ்நாடு ,மகாராஷ்டிரா ,குஜராத் ,பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் முன்னதாகவே சோதனை நடத்தப்பட்டது.நில ஆவணங்கள் 22 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரே நேரத்தில் செய்ய முடியாது.முதலில் ஆங்கிலம் ,இந்தி மற்றும் மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆவணங்களை மாற்றி அமைக்கலாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
மேலும் ஆர்.ஓ.ஆர் களின் லட்சிய திட்டம் ரூ.11 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றது.இந்த திட்டம் ஒரு வருடத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்.ஓ.ஆர் அமைப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.