புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்!
தமிழக அரசு தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இதில் இருபத்தி ஒரு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசுகள் வழங்குகின்றனர். இருபத்தி ஒரு மளிகை பொருட்களும் தரமற்ற இருப்பதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்து வண்ணமாகவே உள்ளது. கோடிக்கணக்கில் பொங்கல்பரிசு இருக்கு செலவு செய்தும் தரமானதாக கொடுக்க முடியவில்லையா என்று மக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஒப்புதல் அளித்ததை குறுஞ்செய்தியாக அவரவர் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
அவ்வாறு ஒப்புதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் பலருக்கு ரேசன் அட்டை இன்று வரை வழங்கப்படவில்லை. அதனால் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் பொங்கல் பரிசு வாங்க முடியாமலும் தமிழக அரசு தர இருக்கின்ற மகளிர்கான ஆயிரம் பெற முடியாமல் போய்விடுவோம் என்று எண்ணி உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று ரேஷன் அட்டையை கேட்டு வருகின்றனர். ரேசன் அட்டை விண்ணப்பித்தவர்கள் 15 நாட்களுக்குள்ளேயே அவர்களிடம் ரேஷன் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும்.
மழை வந்ததை கார்ணம் காட்டி ரேசன் கார்டுகள் அச்சடிக்க படவில்லை என்று மறுபக்கம் உணவு வழங்கல் துறை அலுவலக அதிகாரிகள் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி ஒப்புதல் ஆக வந்த குறுஞ்செய்தியை நியாயவிலை கடைகளில் காட்டி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனை நம்பி மக்கள் ஒப்புதல் வந்த குறுஞ்செய்தியை நியாயவிலை கடைகளில் எடுத்து சென்று காட்டியும்அவர்களுக்கு எந்த ஒரு பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. அதனால் மக்கள் ஏமாற்றத்துடன் உடனே வீட்டுக்கு திரும்புகின்றனர். அதனால் ரேஷன் கார்டு விண்ணப்பித்து அதற்கான ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.