மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது.

மேலும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி பல சாதனைகளை புரிந்தன.

இவ்வாறிருக்க வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசரின் மூலம் சில விஷயங்களை மட்டுமே கண்டறிய முடிந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் புது சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.