அசாமில் புதிய கட்டுப்பாடு – அசாம் அரசு அதிரடி!

0
76

அசாமில், தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அசாம் அரசு குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அசாம் அரசு கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5902 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் 44 ஆயிரத்து 75 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5625 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகே அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத ஊழியர்கள், அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.