பீஸ்ட் படத்தின் புதிய வெளியீடு! ஐந்து மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

0
173

பீஸ்ட் படத்தின் புதிய வெளியீடு! ஐந்து மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, பட வெளியீட்டிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின.

அதன்படி முதலாவது பாடலாக சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசை அமைத்து பாடிய ‘அரபிக்குத்து’ பாடல் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 19-ந் தேதி ‘ஜாலியோ ஜிம்கானா’ என்னும் பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார்.

இதையடுத்து படத்தின் டீசருக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே ரசிகர்கள் படத்தின் டீசரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையடுத்து படம் வெளியாக உள்ள அனைத்து மொழிகளிலும் படத்தின் ப்ரமோஷனை சிறப்பாக நடத்த, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது படத்தின் போஸ்டர்களை படம் வெளியாக உள்ள ஐந்து மொழிகளிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Previous articleஇதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!
Next articleமழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!