சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!

0
229
new-resolution-in-the-assembly-12-hours-work-seaman-question
new-resolution-in-the-assembly-12-hours-work-seaman-question
சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!
தமிழக சட்டமன்றத்தில் நேற்று தொழிலாளர் மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றி அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றினர்.
ஆளும் திமுக அரசின் இந்த செயலை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்த புதிய சட்ட மசோதாவால் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த சட்டம் குறித்து காட்டமான பதிலை தெரிவித்துள்ளார்.இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. கடுமையாக எதிர்ப்போம். எப்படி பாஜக வேளாண்மையை முடிக்க வேளாண் மசோதாவை கொண்டு வந்ததோ, காடுகளை முடிக்க வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததோ அதுபோலத்தான் இது.
இவ்வளவு காலம் போராடி 8 மணிநேரம் உழைப்பதே அதிகபட்சம். அவர்களிடம் போய் 12 மணி நேரம் உழை என்றால் இது தொழிலாளர் நலச்சட்டம் கிடையாது. இது நாசச் சட்டம். இதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம்.
பாஜக ஆளுகின்ற மாநிலத்தை தவிர முதன்முதலாக தமிழ்நாட்டில் இதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏன். கேரளாவில் இருக்கிறதா, ஆந்திராவில், கர்நாடகாவில் இருக்கிறதா, எதற்காக இது கேட்டால் பாஜகவை எதிர்க்கிறோம் என்பார்கள். பாஜகவின் கிளைக்கழகமாக இங்குள்ளவர்கள் செயல்படுகிறார்கள் என தனது காட்டமான பதிலை தெரிவித்துள்ளார்.
Previous articleஅதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!   
Next articleகாலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!