UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!

Photo of author

By Gayathri

UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!

Gayathri

New restriction for UPI ID users from 1st February!! Blocked cash transactions!!

யு பி ஐ பயன்பாட்டினை சீராக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் சிலர் சிக்கல்களை சந்திப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் NCPI தெரிவித்திருக்கிறது.

அதாவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யு பி ஐ ஐடிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.

இந்திய தேசியக்கொடுப்பளவு கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

யுபிஐ செயலிகளை பயன்படுத்தக்கூடிய பயனர்கள் பண பரிவர்த்தனையின் பொழுது பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எண்களை பயன்படுத்தக் கூடாது என்றும் ஒருவேளை அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அந்த பண பரிவர்த்தனை ஆனது மத்திய அமைப்பு மூலம் நிராகரிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அதன் பின் மேற்கொள்ளப்படக் கூடிய பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆல்ஃபா மற்றும் நியூமரிக்கல் எங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCPI மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த புதிய விதியானது யுபிஐயின் தொழில்நுட்ப அம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவே தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.