வங்கிகளில் பணம் எடுக்கும் முறைகளில் புதிய கட்டுப்பாடு!

0
103

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கணக்கு திறக்கப்பட்ட கிளை தவிர மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல காசோலை மூலமாக எடுப்பதாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம். ஆனால் காசோலை பரிவர்த்தனையும் மூன்றாம் தரப்புக்கு அதிகபட்சமாக வரம்பு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிளாட்டினம் கார்டில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் அதே கார்டில் ஒரு முறைக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் சுவைப்பிங் மெஷின் மூலமாக 1.25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும்.பஞ்சாப் நேஷனல் வங்கி கிளாசிக் கார்டில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ஒரு முறைக்கு 20 ஆயிரம் மற்றும் சுவைப்பிங் மெஷினில் அறுபதாயிரம் ரூபாய் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். கோல்ட் கார்டில் ஒருமுறை ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் ஒருமுறைக்கு 30 ஆயிரம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் ஸ்வைப் மெஷினில் ரூபாய் 1.25 லட்சம் வரையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம் மிஷினில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். மற்ற வங்கிக் கிளைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரையில் எடுக்க இயலும் மூன்றாவது தரப்பு கேஸ் வித் ட்ராவலில் பரிவர்த்தனை ஒரு முறைக்கு 50 ஆயிரம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.ஐசிஐசிஐ வங்கி கணக்கு திறக்கப்பட்ட வங்கி கிளையில் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வரையில் பணம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கிளைகளில் எடுத்தால் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வரை மட்டுமே இலவசமாக இருக்கலாம் அதை தாண்டிவிட்டால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.