சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய நிர்வாகி! அதிரடி விசாரணை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!

0
90

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கே டி . ராகவன் இவர் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பங்கேற்றிருந்தார். இதனால் இவர் கட்சியில் மட்டுமல்லாமல் பொது மக்களிடையே பிரபலமாக இருந்து வந்தார்.அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காணொளி காட்சி ஒன்று நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பெண் ஒருவருடன் கே டி ராகவன் அரை நிர்வாண நிலையில், ஆபாசமாக பேசுவது போலவும், அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது போலவும் காட்சிகள் இருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் சார்ந்த மதன் ரவிச்சந்திரன் இந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை சந்தித்து உரையாடி இருக்கிறார்.அதன் பின்னர் அறிக்கை வெளியிட்ட கே டி ராகவன் இந்த விவகாரம் தொடர்பாக நான் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து விவாதம் செய்தேன். நான் தற்சமயம் வகித்து வரும் பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் எனக்கும், கட்சிக்கும், கலங்கும் உண்டாக்க சதி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தர்மம் வெல்லும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பாலியல் விவகாரம் பாரதிய ஜனதா கட்சிக்குள் பூதாகாரமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் இன்னமும் 14 பேரின் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், நேரம் வரும்போது அதை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கின்ற பல சிக்கலான இந்த வீடியோ விவகாரத்தில் சிக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது இதனால் கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.இந்தப் பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மலர்கொடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதாவது கே டி ராகவன் மீதான பாலியல் விவகாரத்தில் நாங்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்கின்றோம். இந்த விசாரணைக்காக மேலும் சில உறுப்பினர்கள் என்னுடன் இடம்பெற இருக்கிறார்கள். அவர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்வார் என்று தெரிவித்திருக்கிறா.ர் புகார் கூறப்பட்டு இருக்கின்ற கே டி ராகவன் இடமும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது அவர் கட்சியில் இருக்கிறாரா அல்லது அவனுடன் எப்படி அவருக்கு தொடர்பு ஏற்பட்டது என்று விசாரணை செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் மலர்கொடி.

கேட்டு ராகவனை சிக்க வைப்பதற்காக திட்டமிட்டு அந்த பெண்ணை பயன்படுத்துகிறார்களா என்பது உள்ளிட்ட தகவல்கள் விசாரணையில் தான் தெரிய வரும் எங்களுடைய விசாரணை அனைத்து கோணங்களிலும், சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தவர் ஆகவே அவரும் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார். இதுபோன்ற குற்றங்கள் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் எல்லாம் நிகழும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதன்படி எங்களுடைய விசாரணை நடக்கும் இதை நீண்ட நாட்களுக்கு விசாரிக்க முடியாது. மிக விரைவிலேயே தீர்வு காணவேண்டும் என்ற காரணத்தால், உடனடியாக விசாரித்து அறிக்கை மாநில தலைவரிடம் வழங்குவோம் என்று மலர்கொடி தெரிவித்திருக்கிறார்.