ஆதார் கார்டுக்கு கொண்டு வந்த புதிய விதிமுறை!! இனி இதை மாற்றம் செய்வது கடினம்!!

Photo of author

By Rupa

ஆதார் கார்டு : இந்திய மக்களிடம் “28 ஜனவரி 2009” ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் கார்டு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் “12 இழக்க” தனித்துவ அடையாள என்னை வழங்கியது. இதில் குடிமக்களின் “பெயர், வயது, முகவரி, தொலைபேசி” ஏன் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

ஆதார் கார்டு அறிமுகமானதிலிருந்து, நம்முடைய அனைத்து விவரங்களும் இதில் இணைக்கப்பட்டிருப்பதால் அரசு சம்பந்தமான அல்லது தனியார் சம்பந்தமான எந்த ஒரு நடைமுறைக்கும் ஆதார் கார்டு மட்டுமே போதுமானது என்ற நிலை உருவானது. இந்த நிலையில் ஆதார் கார்டில் உள்ள நமது விவரங்களில் ஏதேனும் பிழை அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டுமேயானால், நாம் எளிதில் மாற்றிக்கொள்ள கூடிய வசதியும் UIDAI வழங்கியிருந்தது.

ஆனால் தற்போது “இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ” ஆதார் கார்டில் விவரங்கள் மாற்றம் செய்யும் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. இதில் பெயர் மாற்றம் செய்யவோ, பிழை திருத்தும் செய்யவோ நீங்கள் கேஜெட் அறிவிப்புடன், உங்கள் பழைய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது உங்களுடைய பெயர் திருத்தம் செய்ய நீங்கள் உங்களுடைய “வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்” போன்றவையை பயன்படுத்தலாம்.

கவனம் தேவை : உங்களுடைய பெயர் மாற்றம் செய்ய உங்களுக்கு “2 வாய்ப்புகள் மட்டுமே” வழங்கப்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது.

அதே போல் உங்களுடைய பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால், இனி பாஸ்போர்ட், SSLC போன்ற ஆவணங்கள் செல்லாது. மாநில அரசால் வழங்கப்பட்ட “பிறப்பு சான்றிதழ்” மட்டுமே சரியான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே உங்கள் ஆதார் கார்டு மாற்றம் செய்ய விரும்பினால் இந்த விவரங்களை கவனத்தில் வைத்து செயல்படுங்கள்.