போன் காலிங் தொடர்பான புதிய விதி!! ஏர்டெல் ஜியோ என அனைத்திற்கும் பொருந்தும்!!

Photo of author

By Gayathri

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது போன் காலிங் தொடர்பான ஒரு புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதி ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நெட்வொர்க் – களுக்கு அடிக்கடி வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என டிராய் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அதனை நவம்பர் ஒன்றான நேற்றிலிருந்து நடைமுறைப் படுத்தும் படியும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆனது வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது மற்றும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதன்விளைவாக டிராய், அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களையும் போலியான போன் கால் மாற்று எஸ்எம்எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் ஆனது தகவல் திருட்டு, ஹேக்கிங், பண மோசடி போன்ற செயல்களை தடுக்கும் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.