லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!!

0
188
New rule to take license!! Drivers who are aware of the rules!!
New rule to take license!! Drivers who are aware of the rules!!

லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!!

ஒவ்வொரு மாநிலத்திலும் புது ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் அதற்கு உண்டான விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பல்வேறு கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் வழங்குபவரிடம் லஞ்சம் கொடுத்து எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் எளிமையான முறையில் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளுகின்றனர்.

இவ்வாறு எந்த ஒரு தனிநபரும் இடையில் கலந்து கொள்ளாமல் இருக்க டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய முறை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதுதான் தானியங்கு விதிமுறை மூலம் ஓட்டுனர் உரிமம் பெறுவது. அதாவது ஓட்டுநர் உரிமம் பெற நினைப்பவர்கள் இந்த தானியங்கு ட்ராக் மூலம் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும்.

அந்த ட்ராக்கில் எண்ணற்ற சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார்கள் போன்றவை பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றபடுகிறார்களா என்பது கண்காணிக்கப்படும். இதற்கு அடுத்து அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இது முன்பு போல எளிதான முறையாக இல்லாவிட்டாலும்  ஒரு சில நன்மைகளும் இதன் மூலம் கிடைக்க இருப்பதாக கூறுகின்றனர்.

தற்பொழுதுவரை இது டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் உள்ள நிலையில் நாளடைவில் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வரும் என கூறுகின்றனர்.

Previous articleதனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!
Next articleமூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்!