இனி ஓட்டுனர் உரிமம் வாங்க எட்டு போட தேவையில்லை!

0
91

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு முதலில் பதிவு செய்துவிட்டு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட தினங்கள் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகு உரிமம் வாங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பல ஆவணங்களை சமர்ப்பணம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக அதிகாரி முன்பு வாகனத்தில் எட்டு போட்டு காட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்போது இருக்கின்ற விதிமுறைகளை மாற்றி ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் குறித்த விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் இரண்டாயிரத்து 2019 அதிகாரம் வழங்குகிறது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகம் வந்து வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை. இந்த நடைமுறையில் மூலமாக பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதை உறுதி செய்ய இயலும் என்று தெரிவித்திருக்கின்றது.

அதோடு அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் ஒரு சில தகுதிகளும் ஏற்படுத்தவேண்டும் பயிற்சியாளர் தரமான பயிற்சி கொடுப்பதற்காக சிமுலேட்டர் வாகனம் மூலமாக வடிவமைப்பு டிரைவிங் பழகுவதற்காக பிரத்தியேக சோதனை போன்றவற்றை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்க படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி மையங்கள் தொழில் ரீதியான சிறப்பு பயிற்சி வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்துத் துறையில் திறமையான ஓட்டுநர்களின் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. சாலை விதிமுறைகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன இந்த நடவடிக்கையின் மூலமாக போக்குவரத்துத் துறையில் நன்றாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை பெற இயலும். இது அவர்களுடைய செயல் திறனை மேம்படுத்துவதற்கு சாலை விபத்துக்களை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.