வந்தது புதிய ரூல்ஸ்!! இனி ஒருவருக்கு இத்தனை சிம் கார்டு தான்.. மத்திய அரசு போட்ட கெடுபிடி!!

Photo of author

By Divya

வந்தது புதிய ரூல்ஸ்!! இனி ஒருவருக்கு இத்தனை சிம் கார்டு தான்.. மத்திய அரசு போட்ட கெடுபிடி!!

இக்காலத்தில் ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளது.அதேபோல் ஒரு போனிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.

நம் நாட்டில் ஆதார் அட்டை மூலம் புதிய சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தும் நடைமுறை உள்ள நிலையில் அதில் புதிய கட்டுப்பாடு ஒன்றை மத்திய அரசு விதித்திருக்கிறது.அதாவது தனி நபர் ஒருவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே பெற முடியும் என்ற உச்ச வரம்பை மத்திய அரசு விதித்திருக்கிறது.

சிம் கார்டுகள் மூலம் பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த சிம் கார்டுகளுக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று தனி நபருகக்கான சிம் கார்டு எண்ணிக்கைக்கான டெலிகாம் சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்ட விதிமுறைப்படி ஒரு நபர் ஆதாருடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே பெற வாங்கி பயன்படுத்த முடியும்.

டெலிகாம் சட்டத்தை மீறி உங்களிடம் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால் அவை சட்டப்படி குற்றமாகும்.முதல் முறை அபராதமாக ரூ.50,000 விதிக்கப்படும்.இரண்டாது முறை ரூ.2,00,000 அபராதமாக விதிக்கப்படும்.மீண்டும் மீண்டும் சிக்கினால் ரூ. 50 லட்சம் வரை அபாரதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று டெலிகாம் சட்டம் சொல்கிறது.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

படி 01:

நீங்கள் முதலில் https://sancharsaathi.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

படி 02:

பிறகு “Know your mobile connection” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பின்னர் உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.

படி 03:

பிறகு கேப்ட்ச்சா குறியீட்டை அதில் என்டர் செய்யவும்.பிறகு தங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP என்டர் செய்தால் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம்கார்டு எண்கள் திரையில் ஷோ ஆகும்.

படி 04:

பிறகு தங்களுக்கு தேவைப்படாத மொபைல் எண்களுக்கு “Not Required” என்ற Request ஆப்ஷனை கிளிக் செய்யவும்.இவ்வாறு செய்தால் தேவைப்படாத மொபைல் எண்கள் துண்டிக்கப்பட்டு விடும்.