டாஸ்மாக் கடைகளில் வரவுள்ள புதிய திட்டம்! காலி பாட்டில்களை கொடுத்தாள் பணம்!
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொண்டு அவர்கள் அந்த காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொழுது அந்த தொகையை திரும்ப வழங்கலாம் என்று யோசனை கூறினார்கள்.
மேலும் காலி பாட்டில்களை திரும்ப பெரும் இந்த திட்டத்தை கொடைக்கானல் ஏற்காடு,கொல்லிமலை,மேகமலை,ஏலகிரி உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களிலும் தேசிய பூங்காக்கள்,சரணாலயங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் இரண்டு மாதங்களுக்கு அமல்படுத்தி அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலி இடத்தை கண்டறிவது ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அவசியம் இருப்பதால் இரண்டு மாதங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் பாட்டில்களை அடையாளம் காண்பதற்கு கியுஆர் கோடு முறையை பயன்படுத்தலாம் என ஆலோசனை செய்து வருகின்றனர்.மேலும் திரும்ப பெற்ற பாட்டில்களில் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய்க்கான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பெரம்பாலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்க அவகாசம் வழங்கி வழக்கை விசாரணை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு தள்ளி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.