தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் நமது பணத்தில் தேவைப்படும் போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. பங்களிப்பு பென்சன் திட்டத்தில் அந்த வசதி கிடையாது. பணி ஓய்வுபெற்ற பிறகு, நாம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் நமக்கு பணத்தை கொடுத்துவிட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது.
அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
இதனை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பயனடையும் அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அந்த ஊழியர் பணியாற்றிய ஆண்டுகளை கணக்கீடு செய்து அதன் அடிப்படையில் முழு ஓய்வூதியம் பெற்று கொள்ளலாம்.இதனை தொடர்ந்து ஒரு அரசு ஊழியர் தவிர்க்க முடியாத காரணத்திற்காக விருப்ப ஓய்வு பெறும் போது அவர்களுக்கு முழு ஓய்வூதியம் பெறும் வகையில் ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழக அரசு தவிர்க்க முடியாத அல்லது எதிர்பாராத காரணத்திற்காக விருப்ப ஓய்வு பெறும் போது அவர்களின் வெயிட்டேஜ் முறை ஊழியர் 55 மற்றும் அதற்கும் குறைந்த வயதில் ஓய்வு பெறும் போது 5 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இதே போல் 56 வயதில் விருப்ப பெறும் போது 4 ஆண்டுகள், 57 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது 3 ஆண்டுகள், 58 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது 2 ஆண்டுகள், 59 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது ஓராண்டு என வெயிட்டேஜ் முறை மாற்றப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.