விஜய்-யின் தவெக கட்சி செய்திகளை தெரிந்துக்கொள்ள புதிய டிவி சேனல்!!

தற்போது நாடு முழுவதும் தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் பற்றிய பேச்சாக உள்ளது. எங்கு திரும்பினாலும் தவெக மாநாடு பற்றித்தான் பேசுகிறார்கள். இதுல்லாம் இருக்க இப்போது தவெக தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தனது வாழ்க்கை இனிமேல் முழு அரசியல்வாதியாக மாறும் எனவும் இதில் கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளார். சினிமாக்கு வணக்கம் சொல்லிவிட்டு அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் விஜய். அவர் கடைசியாக H. வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தவெ கழகத்தின் கொள்கை, கோட்ப்பாடு, அதன் செய்திகளை விரைவாகவும், உள்ளதை உள்ளபடி காட்ட வேண்டும் என்பதற்காக புதிய டிவி சேனலை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறனர். இந்த டிவி சேனலுக்கு வாகை டிவி என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளனர்.