அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!!

0
172

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!!

திமுகவின் பொதுச் செயலாளர், பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் யார் பொதுச் செயலாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் பொது செயலாளராக பதவி வகித்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.இவர் அண்மையில் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.இவர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு காரணம், வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமிக்கும், சுப்புலட்சுமி அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று உட்கட்சி வட்டாரங்களால் பேசப்பட்டது.

இருப்பினும் இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் எதுவும் கூறவில்லை. தான் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக மட்டுமே கூறியிருந்தார்.
மேலும் திமுக கட்சியிலிருந்து விலகிய நான் வேறு எந்த கட்சியிலும் இனைய போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு பூங்கோதை ஆலடி மற்றும் அருணா உள்ளிட்டோரின் பெயர் அடிபட்ட நிலையில்,தற்போது கனிமொழி அந்த பொறுப்பிற்கு தேர்வாகியுள்ளது உறுதியாகியது.கனிமொழி திமுக பொதுச்செயலாளர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென்று தகவல் வெளியாகியுள்ளது.இது  திமுக அரசியலில் புதிய திருப்புமுனையாக அமையும் என்று கருதப்படுகிறது.

 

Previous article20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleஎனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!