பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அத்திசையை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இன்று முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் கட்சி தலைவராக பதவி டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் தற்போது “செயல் தலைவர்” என்ற புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆகியவற்றை மிக நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை டாக்டர் ராமதாஸ் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, அன்புமணி மற்றும் முகுந்தன் (ராமதாஸ் பேரன்) ஆகியோருக்கு இடையில் கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாக முறைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததைக் அன்புமணி எதிர்த்தது மற்றும் தனி அலுவலகம் திறந்து தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகள் நடத்தியது, பாமகவில் உள்கட்சி நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புதிய மாற்றம், பாமகவின் எதிர்கால அரசியல் செயல்பாடுகளை மாற்றக்கூடிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில், பாமக எந்த பாதையில் பயணிக்கப் போகிறது என்பதையும் இது தீர்மானிக்கும். இந்த மாற்றம், தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்குமா என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.