விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு!
விவசாயிகள் டெல்லியில் பல இடங்ளில் போராடி வருகின்றனர்.இவர்கள் கடும் மழை மற்றும் வெயில் என்ற எதுவும் பாராமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர்.இந்த போராட்டமானது 98 நாட்களை கடந்து செல்கின்றது.விவசாயிகளின் இந்த கடும் போரட்டத்தின் முடிவு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என மக்கள் அனைவரும் நம்புகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மூன்று வேளான் சட்டங்களையும் தவிர்க்குமாறு பஞ்சாப்,உத்திரபிரதேசம்.பீகார் ஆகிய மாநிலத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசின் பதில் திருப்திகரமாக இல்லாததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.கடும் பனி தாங்கிய விவசாயிகள் இப்போது வெயில் காலம் நெருங்கி வருவதால் தங்களின் டிராக்டரை எடுத்து வந்து அதன் பின்புறம் கூரை போல் அமர்த்தி வருகின்றனர்.
அந்த கூடாரத்தில் மின்சாரம் வசதி மற்றும் காற்றாடி,விளக்கு என அனைத்தையும் தங்களின் சௌகரியத்திற்கு ஏற்ப அமைத்து வருகின்றனர்.எங்களுக்கு நியாமான தீர்ப்பு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை என அனைவரும் கூறுகின்றனர்.அனைத்து கால சூழலிற்கு ஏற்றவாறு தங்களின் தேவைகளை போராட்ட களத்தில் நாங்களே ஏற்படுத்தி கொண்டு போராடுவோம் என விவசாயிகள் கூறுகின்றனர்.