“ஜெய் அனுமான்” படத்தின் புதிய அப்டேட்!!

Photo of author

By Vinoth

“ஜெய் அனுமான்” படத்தின் புதிய அப்டேட்!!

Vinoth

Updated on:

New Update of “Jai Hanuman”!!

தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்து அவருக்கு ஜோடியக நடிகை அமிர்தா ஐயர் நடித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான “அனுமான்” படம் அதிக வசூல் செய்தது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கினார் அதில் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி படமாக இருந்தது.

மேலும் அந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் k.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார். இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் இப்படம் வெற்றியைத்தொடர்ந்து ஜெய் அனுமான் படத்தையும் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அறிவிப்பு வரும் என்று இயக்குனர் பிரசாந்த் வர்மா கூறி இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் புகைபடம் ஓன்று வெளியாகி உள்ளது.

அதில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார் என்று இயக்குனர் பிரசாந்த் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் ஜெய் அனுமான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா தனது x தளத்தில் பதிவுசெய்துள்ளார்.