பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய நியூ அப்டேட்! அதிருப்தியில் மக்கள்! 

0
296
New Update on Pongal Gift Package! Disgruntled people!
New Update on Pongal Gift Package! Disgruntled people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய நியூ அப்டேட்! அதிருப்தியில் மக்கள்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை முடிந்தது அதற்காக மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.ஆனால் அப்போது ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம் தான்.அவ்வாறு கடந்த முறை திமுக பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கியது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்று இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் காரணமாக இந்த முறை பொங்கல் பரிசாக ரூ 1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.அதனை தொடர்ந்து இந்த பொங்கல பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.அதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லையெனில் அவர்களுக்காக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகின்றது. கடந்த முறை வழங்கப்பட்ட 21 பொருட்களில் 100 மிலி ஆவின் நெய் வழங்கப்பட்டது.அதே போல இந்த முறை பரிசு தொகுப்பில் ஆவின் நெய் வழங்கப்படுமா என்ற எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு நெய் தயாரிக்க வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை என கூறப்பட்டிருந்தது.அதனால் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

Previous articleமின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
Next article4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ்  அரசுக்கு கோரிக்கை