சிவகார்த்திகேயன்  நடிக்கும் மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
220
#image_title

சிவகார்த்திகேயன்  நடிக்கும் மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயன்  தனது நடிப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்.அவர் இப்பொழுது முன்னணி நடிகராக வெள்ளித்திரையில் வளம் வருகிறார்.

அவர் இறுதியாக நடித்த பிரின்ஸ் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன்  நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் மற்றும் நகைச்சுவை நடிகராக யோகி பாபு என்று பலர் நடித்துள்ளனர்.

மாவீரன் படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.இப்படம் ஜூலை 14 ம் தேதி திரையராங்குகளில் வெளிவர உள்ளது.

படத்தின் தமிழ்மொழி உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மாவீரன் படத்தில் இருந்து வெளியான சீனா சீனா பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்பொழுது இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.மாவீரன்  படத்தின் ஆடியோ லான்ச் ஜூலை 2ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம்  கல்லூரியில் நடை பெற இருப்பதாக கூறப்படுகிறது.