தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

0
102
#image_title

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை விட பேருந்தில் பயணம் செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர்.

சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரம் வரையில் பேருந்து பயணமே அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பேருந்து பயணத்தையே வசதியாக விரும்புகின்றனர்.

விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே மக்கள் பேருந்து பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

விடுமுறை மற்றும் பண்டிகை காலக் கட்டங்களில் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்து என இரண்டு வகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பேருந்தில் முன் பதிவு செய்யும் வசதியும் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.

அரசு பேருந்தில் கட்டணம் குறைவாக இருப்பதால் மக்கள் ரயில் பயணத்தை காட்டிலும் இதையே அதிகம் தேர்ந்தேடுக்கின்றனர்.

எனவே மத்திய அரசு பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியபேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் வகையில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்பட நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் முதல் கட்டமாக தற்போது 600 பேருந்துகள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 150 பேருந்துகள் தாழ்தள பேருந்துகளாக வாங்கப்படுகிறது என்றும் அறிவிப்பு வந்துள்ளது.

இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் இதற்கு பாடி கட்டும் நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

author avatar
CineDesk