இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

Photo of author

By Parthipan K

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

Parthipan K

New update released by Instagram! Users rejoice!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

தற்போது வளர்ந்து வரும் தொல்நுட்ப காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேடஸ் என 30 நிமிடங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.அதே போன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள்,வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது.

ஸ்டோரிஸ் என்ற பிரிவில் முன்பு ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்தால் அது 15 விநாடி வீடியோக்களாக நான்கு பிரிவுகளாக பிரிந்து பதிவேற்றம் ஆகும். இதனால் வீடியோ பதிவேற்றம் செய்வோர் 15 விநாடி வீடியோக்களாக பதிவேற்றம் செய்யும்  நிலை உள்ளது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதில் கிடைத்த முடிவின் அடிப்படையில் ஒரு நிமிடம் வீடியோவை பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் தற்போது வெளியிட்டுள்ளது.இதனால் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.