இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி தான் பல வேலைகளை அணைவரும் செய்து கொண்டு வருகிறார்கள் .
அதுவும் ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கி அதுவும் தங்களது கம்பெனி சம்பந்தமான மீட்டிங்களுக்கு கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர்.
கூகுள் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவரும் இலவச மீட்டிங்களை அதிகபட்சம் 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி கலந்து கொள்ள முடியும்.
ஜி சூட்’ மற்றும் ‘ஜி சூட் பார்’ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மீட்டிங் நேரத்தின்போது அதிகபட்சமாக 250 பெயர் வரை கலந்து கொள்ளும் வசதியை கூகுள் வழங்கியுள்ளது.
ஒரு லட்சம் பேருடன் நேரலையில் மீட்டிங் செய்யும் வசதியும், வீடியோ ரெக்கார்டு செய்து கூகுள் ட்ரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதியும் கூகுள் நிறுவனம், ‘ஜி சூட்’ மற்றும் ‘ஜி சூட் பார்’ போன்ற இரு நிறுவனங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கியுள்ளது.
இதற்காக மாத கட்டணமாக ஒவ்வொரு பயனாளரிடமும் சுமார் 25 டாலர் வசூலிக்கப்பட உள்ளது, மற்றும் இதன் இந்திய மதிப்பு ரூ 1800 ஆகும்.