நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய UPI ரூல்ஸ்!! வாலட் வரம்பு ரூ.2000 – த்திலிருந்து ரூ.5000 மாக உயர்த்தப்பட்டுள்ளது!!

Photo of author

By Gayathri

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மேலும் இவற்றை ( 1.11.2024 ) இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பிளாட்பார்மில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதுவரையில் சிறிய பரிவர்த்தனையை மட்டுமே கொண்டுள்ள இந்த பிளாட்பார்மில் பண பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கும் பொருட்டு இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலாவது மாற்றமாகா நவம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்பட இருக்கிறது. இதுவரையில் ஒவ்வொரு பயனும் 500 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதனை 1000 ரூபாயாக ஆர்பிஐ உயர்த்தி உள்ளது.

இரண்டாவதாக யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் இதனை நினைவூட்டும் விதமாக முன் கூட்டியே யுபிஐ லைட் வாலட்டில் அதிகபட்சமாக ரூ.2000 பேலன்ஸ் வைத்திருக்க முடியும் என்றும், மேலும் யுபிஐ லைட் வாலட்டின் தினசரி செலவு வரம்பு (Daily spending limit of UPI Lite Wallet) ரூ. 4000 ஆகவும் இருந்தது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டோ அப்டேட் முறையில் யுபிஐயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாலட்டில் பணம் தீர்ந்து விட்டால் பயனர்கள் அதனை தாங்களாகவே நிரப்பி வந்த நிலையில், தற்போது வாலட்டே ஆட்டோ அப்டேட் முறையில் யுபிஐ வாலெட்டில் பணத்தை நிரப்பி கொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக டிராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகளை நவம்பர் 1 முதல் அமலுக்குக்கு கொண்டுவருவதாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு மாத காலம் அவகாசம் பெறப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.