வந்துவிட்டது தமிழக காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!
தமிழக காவல் துறையில் வெளிவந்துள்ள காவல் துணை ஆய்வாளர் பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 750 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி வந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 750 காவல் துணை ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் [டிஎன்யுஎஸ்ஆர்பி] வெளியிட்டுள்ளது. இதற்க்கான தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக வருகின்ற 30 தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் ; 750
பணி SI of Police [ Taluk] ; 366
பணி SI of Police [AR] ; 145
பணி SI of Police[ TSP] ; 110
பணி Station officer ; 129
இந்த காலியிடங்களில் 191 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி ; ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு ; 1.7.2023 அன்றைய தேதியின் படி வயது வரம்பு 20-30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அரசு ஒதுக்கீட்டின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை ; எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் சிறந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவர்.
விண்ணப்பிக்கும் முறை ; தமிழக காவல் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான tnusrb.tn.gov.in -ல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ; ரூ.500 காவல் துறையில் பணியாற்றுபவர்கள் ரூ. 1000 மும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் ; 30.06.2023
மேலும் விவரங்களுக்கு இணையதள பக்கத்திற்குச் சென்று தேவையான விவரங்களைஅறிந்துக் கொள்ளலாம்.