கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது!

0
177
New virus detected in India again!
New virus detected in India again!

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது!

தற்போது புதிய வைரசாக ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனாவின் மறு உருவமாக பலர் பார்கின்றனர். இது கோரோனாவை விட வலிமை வாய்ந்தது என அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சொல்லப்படுகிறது. இது உலகத்தில் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகத்தில் பல நாடுகளிலும் பரவி விட்டதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் ஆனது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் இரண்டு பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முதியவர் என்றும், மற்றொருவர் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் 46 வயதானவர் என்பதும் தெரிய வந்தது.

ஆனால் அந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒரே வாரத்தில் சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விட்டார். ஆனால் அந்த மருத்துவரோ எந்த நாட்டிற்குமே செல்லாமல் அவருக்கு ஓமைக்ரான் தொற்று எப்படி வந்தது என பலரும் பலவித பரிசோதனைகளை அவரிடம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அவருடன் தொடர்பில் இருந்து ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர்களது மரபணுவில் இருந்து அது எந்த விதமான வைரஸ் என்று கண்டறிய அவர்களது சளி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் ஒமேக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த நபருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே நாடு முழுவதிலும் சர்வதேச நாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு வார காலத்திற்கு பின்னரே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் இந்த தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பிய அவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் வந்த அந்த நபரை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பதை  உறுதி செய்ததை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும் அவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய மரபணு மாற்ற மருத்துவ பரிசோதனையும் அவரிடம் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் காரணமாக அவருடன் தொடர்பில் இருந்தந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Previous articleசேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!
Next articleதமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்!