தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்!

0
69
Pongal gift from the Government of Tamil Nadu! Important information released!
Pongal gift from the Government of Tamil Nadu! Important information released!

தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்!

தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். நாம் உண்ணும் உணவைத் தரும் விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மக்கள் பொங்கல் திருவிழா அன்று புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைத்து விட்டு வணங்குவது வழக்கம்.அதனையடுத்து மாட்டுப்பொங்கல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடப்படும்.தமிழர்களுக்கு உரித்தான இந்த பொங்கல் திருவிழாவை ஏழை எளிய மக்களும் கொண்டாடுவதற்காக தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.

இந்த பொங்கல் பரிசுகளில் பச்சரிசி ,வெல்லம், கரும்பு, ஏலக்காய், திராட்சை, புத்தாடை என பொங்கல் திருநாளன்று நாம் உபயோகிக்கும் அனைத்து பொங்கல் பொருட்களையும் தமிழக அரசு பரிசாக வழங்குவது வழக்கம். அத்துடன் ரூ 1000 பணத்தையும் பொங்கல் பரிசாக வழங்குவர். இம்முறை திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம் தான். திமுக அரசும் தமிழக மக்களுக்கு கரும்பு ,அரிசி, பருப்பு முதலிய பொங்கல் பரிசுகளை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.ஆனால் பணம் தருவதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஏன் இம்முறை பணம் தரவில்லை என்ற கேள்விகள் பலர் கேட்டுவந்தனர்.ஆனால் அதற்கு அரசு எந்தவித சரியான பதிலளிக்காமல் தற்போது வரை மௌனம் காத்து வருகிறது. 20 பொருள்கள் அடங்கிய கரும்பு பரிசு மட்டுமே வாழ போவதாக கூறியுள்ளனர். இந்தப் பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக கண்காணிப்புக்குழு தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த குழுக்கள் அம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்படுவதாக தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த குழுக்கள் அமைப்பதினால் மக்கள் அனைவருக்கும் சரியான முறையில் பொருட்கள் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.