ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு அதிக அளவு மக்கள் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருப்பதற்காக ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மேலும் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு அதனால் பயணிகள் ரயில் பயணத்தையே அதிக அளவு நாடி செல்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ ஆர் டி சி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாக பயணிகள் ஐ ஆர் டி சி கணக்கினை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி போன்றவற்றை அதில் சரி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
ஏனெனில் கொரோனா காலகட்டத்தின் போது பல டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இருந்ததன் காரணமாக தற்போது ஐ ஆர் டி சி கணக்கை சரிபார்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி வருகின்றது. மேலும் இந்த கணக்கை சரிபார்த்தால் மட்டும்தான் உங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.