இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!!

0
181
New working hours are effective from today!! Only work from 7.30 am to 2 pm!!
New working hours are effective from today!! Only work from 7.30 am to 2 pm!!

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!!

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து கொண்டு இருக்கும் வேலையில் இந்தியாவில் ஒரு மாநில அரசு வேலை நேரத்தை குறைத்துள்ளது. அது வேறு எந்த மாநிலமும் அல்ல பஞ்சாப் மாநில அரசு தான், அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றியுள்ளது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் இந்த புது வேலை நேரத்தை இன்று அமல் படுத்தியுள்ளார். இந்த புது வேலை நேரப்படி பஞ்சாப் மாநில அலுவலகங்கள் காலையில் 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை செயல்படும். இந்த புதிய வேலை நேரம் ஜூலை மாதம் 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கோடை காலத்தில் மின்சாரத் தேவையை ஈடு செய்யவும், மின்சார பயன்பாட்டை குறைக்கவும் இந்த புதிய வேலை நேரம் அமல் படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தின் அதிக பயன்பாடு மதியம் 1 மணிக்கு மேல் அதிகரிக்கின்றது என்ற தரவின் படி இந்த புதிய வேலை நேரம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!
Next articleCSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!