நாளை அதாவது ஜனவரி 01 அன்று நாம் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.இந்த 2025 ஆம் ஆண்டு அனைத்து ராசியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1)மேஷம்
இந்த 2025 ஆம் ஆண்டில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
2)ரிஷபம்
நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறை திருத்திக் கொண்டு சரியான முடிவை எடுப்பீர்கள்.உங்களுடைய திறமையை சரியான முறையில் வெளிப்படுத்த இந்த 2025 ஆம் ஆண்டு உதவும்.
3)மிதுனம்
2025 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு செழிப்பான ஆண்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.பணப் பிரச்சனை நீங்கி அதன் வரவு அதிகரிக்கத் தொடங்கும்.புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
4)கடகம்
குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
5)சிம்மம்
தடைகளை சமாளிக்கும் ஆண்டாக 2025 உள்ளது.இந்த ஆண்டில் நிதானமாக செயல்பட வேண்டியது முக்கியம்.
6)கன்னி
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் சோர்ந்தவர்கள் வருகின்ற 2025 ஆம் ஆண்டு புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள்.
7)துலாம்
நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக 2025 உள்ளது.வானங்களை இயக்கும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
8)விருச்சிகம்
இந்த ஆண்டில் புதிய அனுபவம் கிடைக்கும்.பெரிய விஷயங்களில் சாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.
9)தனுசு
எடுத்த காரியங்கள் நல்லபடியாக முடியும்.இந்த ஆண்டு சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.நல்ல இலக்குகளை நோக்கி செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
10)மகரம்
கடந்த காலங்களில் செய்த தவறுகளை நினைவில் கொண்டு வருங்காலங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.இந்த ஆண்டு தங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
11)கும்பம்
இந்த புத்தாண்டில் கும்ப ராசியினருக்கு ஏழரை சனி முடிவடைகிறது.இதுவரை சந்தித்த அனைத்து பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகும்.எடுக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.
12)மீனம்
இந்த புத்தாண்டில் தங்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.நினைத்த காரியங்கள் கைகூட திறம்பட செயல்பட வேண்டும்.