தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்?

Photo of author

By Janani

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்?

ஜனவரி 1 ஆம் தேதி முதல் மினிரல் வாட்டர் எனப்படும் 20 லிட்டர் கேன் வாட்டாரின் விலை 2 ரூபாய் உயர்த்த போவதாக ரெட்ஹில்ஸ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கேன் வாட்டாரின் விலைகள் இடத்திற்கு எற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கே கே நகரில் மேற்கு மாம்பலம் போன்ற முக்கிய நகரங்களில் கூட 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படும் 20 லிட்டர் கேன் வாட்டார் புற பகுதிகளில் 30 முதல் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இந்த நிலையில் குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவுத்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூல பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால் இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ளதாக குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முறையே 300, 500, 1 லிட்டர் 2 லிட்டர் மற்றும் 3 லிட்டர் கேன் வாட்டாரின் விலை ஒரு அட்டை பெட்டிக்கு 10 வீதம் உயர்த்தி உள்ளது.இந்நிலையில் இது தான் தமிழக மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.