5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!

0
106
#image_title

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!

நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.

நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 41வது லீக் சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவர்களின் முடிவில் பத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் சிறப்பாக விளையாடிய குசால் பிரேரா 28 பந்துகளில் அரைசதம் அடித்து 58 ரன்கள். சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப மகீஸ் தீக்சனா 38 ரன்கள் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 171 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியில் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற ரச்சின் ரவீந்திரா, சேன்ட்னர், பெருகுசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சவுத்தி 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதையடுத்து 172 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கான்வே, ரவீந்திரா இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடக்க வீரர் கான்வே 45 ரன்களும், ரவீந்திரா 42 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய டேரி மிட்செல் கடைசி வரை விளையாடி 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 17 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் பந்துவீச்சில் ஆஞ்சலோ மேத்யூஸ் இரண்டு விக்கெட்டுகளையும் சமீரா, தீக்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் 5வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி தற்பொழுது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் இருப்பதால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே நியூசிலாந்து அணியின் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு அமையும்.

Previous articleமுகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!
Next articleதுவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!