பிறக்கும் குழந்தைகளுக்கு கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டிலேயே கண்மை செய்யலாம்!! இதோ இந்த 2 பொருள் போதும்!!

Photo of author

By Rupa

பிறக்கும் குழந்தைகளுக்கு கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டிலேயே கண்மை செய்யலாம்!! இதோ இந்த 2 பொருள் போதும்!!

குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களிலும் இக் காலக்கட்ட பெற்றோர்கள் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் அவர்கள் போடும் துணி முதல் பேம்பர்ஸ் முதல் அனைத்தையும் நம்பர் 1 யில் கொடுக்கவும் அது அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் படியும் தேடி தேடியே ஒவ்வொன்றாய் வாங்குகின்றனர்.அந்த வகையில் கைக்குழந்தைகள் முதல் வளரும் வரை அவர்களுக்கு வைக்கப்படும் கண் மை ஆனது 100% இயற்கையாகவே நாம் வீட்டில் செய்யலாம்.

ஒரு சில பொருட்களில் முக்கிய கவனம் செலுத்தினாலும் சாதாரண சில பொருட்களில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறோம்.ஆனால் அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று.பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் கண் மையானது 100% இயற்கையானதாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களுக்கு அலர்ஜி ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டு விடும் இதனையெல்லாம்  தடுக்க நாம் வீட்டிலேயே கண்மையை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை துணி

மஞ்சள் கரிசலை

செய்முறை:
ஓர் வெள்ளைத்துணியில் மஞ்சள் கரிசலை சாறு விட்டு உலர்த்தி வைக்க வேண்டும்.
பின்பு இதனை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்துணியை எரித்தால் அதிலிருந்து சாம்பல் கிடைக்கும்.
பின்பு இந்த சாம்பலை விளக்கெண்ணையில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.
இது முற்றிலும் இயற்கையே தவிர ஒரு சதவீதம் கூட எந்த ஒரு கெமிக்கல்களும் இல்லை.

இந்த மை வைப்பதால் கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சி மற்றும் பார்வை தெளிவு பெரும்.